கிண்ணியா - குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி Dr.எ.எம்.அஜித் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!!!!

கிண்ணியா நகர சபை பிரதேசத்தில் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் Covid - 19 கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் மக்கள் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுமாறு குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி Dr.எ.எம்.அஜித் அவர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்
கிண்ணியா பிரதேசத்தில் திருமண வைபவங்களை நடாத்தும் போது சுகாதார நடைமுறைகளை பேணுவதோடு, மட்டுப்படுத்தப்பட்ட நபர்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அதாவது நெருங்கிய உறவினர்களை மாத்திரம் அனுமதித்து மிக எளிமையானமுறையில் நடாத்தப்பட வேண்டும் அத்தோடு பள்ளிவாயல்களில் ரிஜிஸ்டர் நிகழ்வுகளை மேற்கொள்ளாது வீடுகளில் செய்துகொள்ளவேண்டும்.
மேலும் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும் என்பதோடு சமூக இடைவெளியை பேணும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அத்தோடு பெற்றோர்கள் தமது பிள்ளைகளை covid19 கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க, தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் இருந்து தவிர்க்காது, தமது வகுப்பு ஆசிரியர்களை தொடர்புகொண்டு சுகாதார நடைமுறைகளை பேணி கல்வி நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்யுமாறு வேண்டிக்கொண்டார்
மேலும் வியாபார ஸ்தாபனங்களில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் முகக் கவசம் (mask ) இல்லாமல் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களாயின் கட்டாய PCR பரிசோதனைக்கு உட்படுத்த படுவதோடு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கடைகள் மூடப்படும் என குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி Dr.எ.எம்.அஜித் அவர்கள் தெரிவித்துள்ளார்
அதேவேளை வாகனங்கள் திருத்தம் மேற்கொள்பவர்கள், அன்றாட கூலி தொழில் செய்பவர்கள்,மற்றும் வயல்,கால்நடை வளர்ப்பாளர்கள், சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.