Header Ads

Breaking News
recent

உடல்களை எரிக்காதே ! தனி மனிதன் போராட்டம்

 கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிக்க வேண்டாமென தெரிவித்து வவுனியா நகரில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாயலுக்கு முன்பாக தனி மனிதனொருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.


குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (11.12.2020) மதியம் காலை 11.00 மணியளவில் வவுனியாவை சேர்ந்த மௌலவி முனாஜித் அவர்களால்  முன்னெடுக்கப்பட்டிருந்தது.


கொரோனாவினால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கையினை அரசாங்கம் நிறுத்த வேண்டும் மேலும் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உ யிரிழந்தவர்களின் உடலை,

அடக்கம் செய்வதற்கு சர்வதேச சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய இலங்கை அரசு அனுமதியளிக்க வேண்டுமென தெரிவித்து தனியொரு மனிதராக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.


இதனையடுத்து தவிர்க்க முடியாத காரணத்தினால் வெள்ளிக்கிழமையான இன்று பெரிய பள்ளிவாசலின் மதிய நேர பிரதான தொழுகை நிறுத்தப்பட்டதாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.