Header Ads

Breaking News
recent

நீங்கள் கொடுக்கும் சிறிய தொகை ஒரு குடும்பத்தை வாழ வைக்கலாம் : நண்பர் ரியாஸ் பற்றிய முழு தகவல்...



ஒருவித நரம்பியல் நோயினால் கடந்த 2019 முதல் பாதிக்கப்பட்டு வருகிறார் நண்பர் ரியாஸ் Parkinson disease ஐ ஒத்த இந்த வியாதி மெல்ல மெல்ல ஒவ்வொரு கலன்களாக செயல் இழக்க செய்யும், இதற்கு ஆங்கில மருத்துவத்தில் எதுவித சிகிச்சையும் கிடையாது. இந்த நிலையில் தனது உடல் அசைவுகள் முழுமையாக செயலிழந்த நிலையில் தனது குடும்பத்தினரின் உதவியுடனேயே தனது அன்றாட கடமைகளை செய்து வருகிறார்.

தற்போது யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஒரு ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தில் இதற்குரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை அங்கு அனுமதிதுள்ளனர், இறைவன் கிருபையால் இப்போது அவரால் தனது அவையங்களை அசைக்க முடிகிறது, பேசவும் முடிகிறது.

இந்த சிகிச்சை 6 மாதங்கள் தங்கியிருந்து எடுத்து கொள்ள வேண்டிய ஒன்று ஆதலால் அவர் மனைவி குழந்தைகள் சகிதம் அங்கே தங்கியுள்ளனர், இதற்குரிய மொத்த செலவு 1 மில் என தெரிவிக்கப்படுகிறது, ஆரம்ப தொகையாக குறித்த கணிசமான தொகையும் முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டும் மிகுதி தொகையை செலுத்தும்படி சிகிச்சையாளர்கள் கோரியுள்ளனர்.

அவரது சகோதரர்கள் ரூ. 500,000 வரை திரட்டியுள்ளனர், சிகிச்சையை தொடர அவரது குடும்பத்தினர் உங்கள் உதவிகளை எதிர்பார்க்கின்றனர், உங்களால் முடிந்த சிறிய தொகை அன்பளிப்பு கூட ஒரு குடும்பத்தை மகிழ்ச்சிபடுத்த உதவும். எல்லோரும் பொருளாதார ரீதியில் மிகவும் கடினமான காலப்பகுதியில் வாழ்கிறோம், சிறு தொகையாயினும் அவர்களின் சுமையை குறைக்க உதவ கூடும். நிதியளிக்க விரும்புவோர் கீழ்வரும் கணக்கு இலக்கத்துக்கு வைப்பு செய்யலாம் ( இந்த தகவல் மற்றும் படங்கள் அவரின் குடும்ப அனுமதியுடன் பகிரப்பட்டது)


மொகமட் ரியாஸ் சனூரியா
கணக்கு இலக்கம் 00877437333
இலங்கை வங்கி, திருகோணமலை


Mohamed Riyas Sanooriya
0087743733
Boc Trincomalee
Powered by Blogger.