சமூக ஆர்வலர் அஷ்ஷெய்ஹ் நசீர் அவர்கள் காலமானார் : ஜனாஸா பி.சி.ஆர் பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலையில்

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
சமூக ஆர்வலரும் அந்நஜா அரபுக்கல்லூரியின் அதிபருமான அஷ்ஷெய்ஹ் நசீர் சுகயீனம் காரணமாக காலமானார்
இன்று (01) புதன்கிழமை சுகயீனமுற்ற நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் காலமானார்.இவர் கந்தளாய் அந்நஜா அரபுக்கல்லூரியின் அதிபராகவும் ஆளுமைமிக்க சமூக சிந்தனையுள்ள ஒரு சமூக செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தார்.
மேலும் இவர் கிராமப்புறங்களில் மக்களின் அன்றாட வாழ்வாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்து பல பொது கட்டடங்களையும் அமைப்பதத்திற்கு உதவி செய்தவராகவும் திகழ்ந்தவர்.
மேலும் அன்னாரின் உடல் கந்தளாய் பொது வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் பி.சி.ஆர் அறிக்கையின் பின்னர் நல்லடக்கத்திற்க்காக உறவினர்களிடத்தில் கையளிக்கயிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது