நாட்டில் இன்றைய நாளில் மாத்திரம் 1096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!!

நாட்டில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்றைய நாளில் மாத்திரம் ஆயிரத்து 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.