Header Ads

Breaking News
recent

பறிமுதல்! விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பு கடத்தல் தங்கம்...சோதனையை தீவிரப்படுத்திய சுங்கத்துறை

சென்னை:டில்லிக்கு கடத்த முயன்ற, 1 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கக் கட்டிகள் மற்றும் துபாய்க்கு கடத்த முயன்ற, 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'யூரோ கரன்சி'களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், நேற்று அதிகாலை முதல், சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காலை, 8:40 மணிக்கு, டில்லி வழியாக, பாரிஸ் நகருக்குச் செல்லும், 'ஏர் - இந்தியா' விமான பயணியரிடம் சோதனை நடந்தது. புதுக்கோட்டையைச் சேர்ந்த, பவ்சுல் கரீம், 21, திருச்சியைச் சேர்ந்த, சையத் அஜீஸ், 22 ஆகிய, இருவரையும் சோதனையிட்டபோது, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.21 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாய் செல்லும், 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று காலை, 9:45 மணிக்கு, புறப்பட தயாராக இருந்தது. இதில் செல்ல வந்த, சென்னையைச் சேர்ந்த, முகமது ஹக்கீம், 41, பீர் முகைதீன், 40 ஆகிய, இருவரது உடைமைகளையும் சோதனையிட்டபோது, 'யூரோ கரன்சிகள்' சிக்கின. அவற்றின் இந்திய மதிப்பு, 14.32 லட்சம் ரூபாய்.

(தினமலர் )
Powered by Blogger.