பால் மற்றும் குடிநீரில் விஷத்தைக் கலந்து தனது மாமியை கொலை செய்ய முற்பட்ட 14 வயது சிறுவன் பொலிசாரால் கைது.
பால் மற்றும் குடிநீரில் விஷத்தைக் கலந்து தனது மாமியை கொலை செய்ய முற்பட்ட 14 வயது சிறுவன்
ஒருவனை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான சிறுவனின் மாமியினால் செவ்வாய்க்கி ழமை மாரவில பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட் டையடுத்து சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
நாத்தாண்டிய, பஹல் தப்போவ, பாணதுர தோட் டத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவனுக்கு பெற்றோர் இல்லாததால் அவன் தனது மாமி யின் அரவணைப்பில் வளர்ந் துள்ளான்.
இந்தச் சிறுவன் பாடசாலை செல்வதில்லை என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் 5 ஆம் திகதி சிறுவனின் மாமிக்கு ஏற்பட்ட சுகவீனம் தாரணமாக அவர் மாரவில ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரின் உட லில் விஷம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப் பட் டுள்ளார்.
அங்கு சிகிச்சை நிறைவ டைந்து வீடு வந்த மாமி சந்தேகநபரான சிறுவனை அழைத்து இது தொடர்பில் வினவியுள்ளார். இதன்போது, சம்பவம் தொடர்பில் சிறுவன் விபரித்துள்ளான்.
அதன்படி சம்பவம் தொடர்பில் சிறுவனின் மாமி மாரவில பொலி ஸில் முறைப்பாடு செய் துள்ளார்.
பின்னர் சந்தேக நபரான சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக ளுக்குட்படுத்தப்பட்டபோது, மாமியின் சித்திரவதைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் அருந்தும் பால் மற்றும் குடிநீரில் விஷம் கலந்ததாக சிறுவன் கூறியுள்ளான், இது தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்,