இலவச பல்துறை வைத்திய மருத்துவ முகாம் திருகோணமலையில்
இலவச பல் துறை வைத்திய மருத்துவ
முகாம் ஒன்றினை கொழும்பு கோட்டை ஸ்ரீ ஜெயவர்த்தனபுர லயன்ஸ் கழகமும், திருகோணமலை லயன்ஸ் கழகமும் இணைந்து திருகோணமலையில் இடம்பெற்றது.
குழந்தை நல விசேட மருத்துவ பரிசோதனை, பிரசவ மற்றும் மகப்பேற்று மருத்துவ பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி வழங்குதல், முழு உடல் பரிசோதனை, நீரிழிவு இரத்த அழுத்தம் சம்பந்தமான மருத்துவ பரிசோதனை, வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் வழங்கள், சட்ட ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தல், குழந்தைப்பருவ புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வழங்கும் துண்டு பிரசுரங்களை விநியோகித்தல், வீட்டுத் தோட்டத்தை மேம்படுத்தும் நோக்குடன் மகளிருக்கான மரக்கன்றுகளை வழங்குதல் போன்ற விடயங்கள் இம்மருத்துவ முகாமில் இடம்பெற்றது.
இதில் லயன்ஸ் கழகத்தின் முன்னாள் ஆளுநரும், கொமர்ஷல் வங்கியின் தலைவருமான தர்ம தீரசிங்க,
றூபா டீரசிங்க, பீ. ஐன ரஞ்சன் மட்டும் லயன்ஸ் கழக அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில் வறுமையில் வாழ்ந்து வரும் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், கண் பார்வையற்றவர்களின் கண்களில் வெளிச்சத்தை வழங்கும் நோக்கிலும், பணமில்லாமல் சட்ட ஆலோசனைகளை பெற முடியாத நிலையில் இருக்கும் பொது மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் நோக்கினும் இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் காலங்களில் கிராமங்கள் தோறும் மக்களுக்கு தேவையான சமூக பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் லயன்ஸ் கழகத்தின் முன்னாள் ஆளுநரும் கொமர்ஷல் வங்கியின் தலைவருமான தர்ம தீரசிங்க தெரிவித்தார்.