Header Ads

Breaking News
recent

அரசாங்கத்தின் ஊடரங்குத் தளர்வு மற்றும் பயண நடைமுறை தொடர்பான அறிவித்தல்!



வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும்-

மற்றும், கொழும்பு கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் -
நாளை செவ்வாய் காலை 6:00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு, மீண்டும் நாளை மதியம் 12:00 மணி முதல் 27ஆம் திகதி, வெள்ளி, காலை 6:00 மணிவரை நடைமுறைப்படுத்தப்படும்.


ஏனைய மாவட்டங்களில் -

இன்று திங்கள் பிற்பகல் 2:00 மணிக்கு நடைமுறைக்கு வரும் ஊரடங்குச் சட்டம் - வியாழன், 26ஆம் திகதி, காலை 6:00 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாள், மதியம் 12:00 மணிக்கு மீண்டும் நடைமுறைக்கு வரும்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு இடையேயும் பயணங்கள் மேற்கொள்வது எந்த நேரத்திலும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் - வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளை இடத்திற்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் - எந்த மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளைக் கொண்டுசெல்வதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் வர்த்தகத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் இந்த பணிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
Powered by Blogger.