Header Ads

Breaking News
recent

உலர் உணவு வழங்கும் நிகழ்வு

(அப்துல்சலாம் யாசீம்) 

பெண்கள் தலைமை தாங்கும் 500 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு  

கிண்ணியா பிரதேசத்தில் உள்ள 500 விதவைகளுக்கான மாதாமாதம் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் ஐந்தாம் கட்டமாக இன்று (14) ஹசனாத் அனாதைச் சிறுவர் நிலையத்தில் வழங்கி வைக்கப்பட்டது  



ஜெர்மன் நாட்டின் ஜெர்மன் ஹெல்பன் நிறுவனத்தின் நிதியுதவியுடன்  
ஹஸன் மௌலவி நற்பணி மன்றம் அஸிஸா பவுண்டேஷன் ஆகியன இணைந்து அதன் தலைவர்களான சாதிக் ஹசன், தாரிக் ஹசன் ஆகியோரினாலும் விதவைகளுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைத்தனர்  

சுமார் 3000 ரூபாவுக்கு மேல் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது  

அரிசி சீனி பருப்பு தேயிலை பிஸ்கட் மற்றும் நெத்தலி கருவாடு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது  


மேலும் தொடர்ச்சியாக இன்னும் ஒரு மாதங்களுக்கு வழங்கப்படும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
Powered by Blogger.