திருமலை மக்களுக்கான வேண்டுகோள் !
(Aboo Firnas)
தற்போதுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்கள் பொதுச்சந்தையில் தமக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக ஒரே இடத்தில் கூடுவதால் நோய் தொற்றும் அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே, இது தொடர்பாக 24. 03. 2020 அன்று மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களினதும் வியாபாரிகளினதும் பாதுகாப்பு கருதி பொருத்தமான நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிக்கப்பட்டது.
இதற்கமைய நகராட்சி மன்ற எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பின்வரும் இடங்களிலும்,
1. லிங்கநகர் நகரசபை காணி
2. மட்டிக்கழி lagoon park
3. மின்சார நிலைய வீதியில் உள்ள நகர சபைக்கு சொந்தமான (மலையருவி முன்பாக உள்ள) வெற்றுக்காணி
4. துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள DS Office காணி
5. அபேயபுர சந்தி
6. ஜமாலியா சந்தி
7. பஸ் நிலையம் அருகே உள்ள வாகனத்தரிப்பிடம்
அதேபோன்று, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை பகுதியில்
1. அலஸ்தோட்டம் சந்தைப்பகுதி
2. உப்புவெளி சந்தி
3. 4ம் கட்டை சந்தி
ஆகிய இடங்களிலும் தற்காலிகமாக வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அனுமதி வழங்க திருகோணமலை நகர சபையாலும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையாலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, இவ்விடங்களில் கோழி இறைச்சி, மீன், மரக்கறி, தேங்காய் போன்றவை விற்பனை செய்ய முடியும்.
வியாபாரிகள் மேற்குறிப்பிட்ட இடங்களில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டு இருக்கும் காலப்பகுதியில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதையும் இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்பதையும் திருகோணமலை நகராட்சி மன்றமும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையும் அறியத்தருகின்றது.
தலைவர்
நகராட்சி மன்றம்