Header Ads

Breaking News
recent

தனிமை


தனிமைக்கு அடிமையாகி

எனக்குள்ளே நானேபேசி
தலையைக் குனிந்து 
நடந்து சென்று
காண்பவர்களுடன்
கண்தொடர்பை அறுத்து
எனக்கென்றொரு உலகம்
உருவாக்கினேன்
அதில் நானே எல்லாயுமானேன்

தீடீர் என்று ஒரு கூட்டம்
எனை விசரென்றது
அக்ககறையான ஒரு கூட்டம்
வைத்தியரிடம்
அழைத்து சென்றது
ஆராய்ச்சி செய்து
ஆலோசனை செய்து
அடுக்கடுக்காய்
பரிசோதனைகள் செய்து
எல்லாம் சரியாகிடும்
என்று முடிவுக்கு வந்தது.

எல்லாம் பிழையானதாலும்
எல்லாம் வினாவானதாலும்
பொல்லாத வாழ்க்கையில்
எல்லாம் கைவிட்டு போனதாலும்
சொல்லும் படி இருந்த ஓர் உரவு 
தன்னைவிட்டு செல்லும்படி
சொன்னாதாலும்
நான் பைத்தியமானேன்
மற்றவர்கள் புத்திசாலியானார்கள்.

இப்போ யாரைமாற்றினால்
எல்லாம் சரியாகும்
என்னையா?
உங்களையா?
Powered by Blogger.