Header Ads

Breaking News
recent

பேஸ்புக் ஊடாக வதந்திகளைப் பரப்பிய பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் கைது!

Covid-19 வைரஸ் தொடர்பில் பேஸ்புக் ஊடாக வதந்திகளைப் பரப்பியமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபரை கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மஹரகம பகுதியை சேர்ந்த 40 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Powered by Blogger.