கத்தாரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பணியாளர்களுக்கு சம்பளம் முழுமையாக வழங்கப்படும்

வெளிநாட்டுப் பணியாளர்கள் உட்பட கத்தாரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து ஊழியர்களும் மாதச் சம்பளத்தை எந்த விதமான குறைபாடுகளும் இன்றி முழுமையாகப் வழங்கப்படும் என்பதாக நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு (MADLSA) தெரிவித்துள்ளது. இன்று தோஹா நகரில் நடைபெற்ற உத்தியோக பூர்வ செய்தியாளர் மாநாட்டிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் கத்தாரில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் இலவச மருத்துவ வசதிகள் அளிக்கப்படும். அவர்கள் கத்தாரில் சட்ட விரோதமாக கத்தாரில் தங்கி பணி புரிபவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு ஏனையவர்கள் போல இலவச மருத்துவ வசதிகள் அளிக்கப்படும். அத்துடன் வெளிநாட்டுப்பணியாளர்களின் கொரோனா வைரஸ் தொடர்பான கேள்விகளுக்கும், முறைப்பாடுகளுக்கும் 92727 புதிய இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு (MADLSA) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.