Header Ads

Breaking News
recent

இனிதே நிறைவடைந்தது பொறுப்பு

Max தமிழ்l Media  உதவும் கரங்கள் திட்டம். பல நண்பர்களின் கட்டாய வேண்டுகோளுக்கினங்க ஆரம்பிக்கப்பட்டது.


உதவும் கரங்கள் வேலை திட்டத்தின் முதலாவது கட்டமாக நாட்டில் ஏட்பட்டுள்ள இந்த அசாதாரண நிலைமையை கருத்துத்தில் கொண்டு அன்றாடம் கூலி தொழில் செய்யும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க தீர்மானித்தது.

 அல்ஹம்துலில்லாஹ் இந்த பயணம் ஒரு சில மணி நேரத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றாலும்  சுமார் 30 அன்றாடம் கூலி வேலை செய்யும் குடும்பங்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் அத்தியாவசிய பொருட்களை வழங்க தீர்மானித்து அதை சிறப்பாக நிறைவேற்ற பலரின் துஆ உடன் அல்லாஹ் வின் அருளால் நண்பர்கள்,உறவினர்கள்,தனவந்தர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற நன்கொடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களான அரிசி,சீனி,கோதுமை மா, பால் மா, சோயா மீட், டின் மீன், தேங்காய், தேயிலை, பருப்பு, மோல்ட்  பால் மா, சமபோஷா போன்ற பொருட்கள் அடங்கிய 
30 பொதிகளை 30 குடும்பங்களுக்கு எமது Max தமிழ்l Media  உதவும் கரங்கள் உறுப்பினர்கள் ஊடாக வெள்ளைமணல்,7ம் கட்டை,ஜமாலியா, மட்கோ, கப்பல்துறை, கன்னியா ஆகிய பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு கொண்டு சேர்க்கட்டது.


 மேலும் இவ் குடும்பங்கள் இன,மத பேதமின்றி தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் என பாரபட்சம் பார்க்காமல் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் இவ் நன்மையான காரியத்தை செய்ய உதவி செய்த அனைவரும் அல்லாஹ் வின் பெயரால் செய்தமையால் அவர்கள் நேரடியாக உரியவர் கைகளுக்கு கொண்டு சேர்க்கும் சந்தர்ப்பம் இல்லாமையால் எம்முடன் கை கோர்த்து இந்த மாபெரும் பணியை சிறப்பட நிறைவு செய்தோம்.

 மேலும் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் உடல் ஆரோக்கியத்தையும் தொழில் நல்ல பரக்கத்தையும் ஈருளகத்திலும் வெற்றியை கொடுத்து  எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக ''ஆமீன்'' '' ஆமீன்''  

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூரினார்கள் யார் ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை இலகுபடுத்துகின்றாரோ கியாமத்துடைய நாளின் அவரின் கஷ்டத்தை அல்லாஹ் இலகு படுத்துகின்றான். (புஹாரி. முஸ்லிம்) 

பாதிக்கப்பட்டவர்களுக்கு வேற்றுமை பாராது உதவுதல் மனித நேயத்தின் உச்சகட்ட பணி எனலாம்.




 “பிறருக்கு உதவுதல் உண்மையில் குணமல்ல.. 
   ஒரு வரம்!”












மேலும் இது போன்ற பல சமூக நல்லிணக்க செயற்படுகளை தொடர அனைவரினதும் துஆ வை எதிர்பார்த்தவர்களாகவும்  உங்கள் ஒத்துழைப்பும், அனுசரணைகளும் தொடர்ந்து எங்களுக்கு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் ஏனையவர்களும் எம்முடன் இனைய விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.



குழுமம்
தொடர்புகளுக்கு :
Max Tamil Media : 075-488 9999
Sajath : 075-6186722
Firnas : 077-2991712 





இப்பதிவு மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும்,சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கா மட்டுமே....





Powered by Blogger.