திருகோணமலையில் தற்பொழுது
(அப்துல்சலாம் யாசீம்)
கடந்த மூன்று தினங்களாக ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தநிலையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது அடுத்து மக்கள் தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
குறிப்பாக திருகோணமலை பொதுச் சந்தையில் மக்கள் முக கவசம் அணிந்து தங்களுடைய பொருட்களை கொள்வனவு செய்ததையும் எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
இருந்தபோதிலும் சுகாதாரத்தை பேணுமாறு பொலிசாரும், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் இராணுவத்தினரும் மக்களை தெளிவுபடுத்தியதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
திருகோணமலை நகர பகுதிகளில் காலை 9 மணி தொடக்கம் 11 மணிவரைக்கும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் திருகோணமலை தலைமையக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
மக்கள் வாகனங்களை செலுத்தும் போது ஊரடங்குச் சட்டமும் தள்ளப்பட்ட நிலையில் புத்தகங்களை குறித்து யாருக்கும் பாதிப்புகள் ஏற்படும் விபத்துக்கள் இடம்பெறும் தங்களுடைய வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை திருகோணமலை நகர் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் கூடிய பகுதிகளுக்கு கிருமிநாசினிகள் பரவுவதை தடுப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் கிருமிநாசினிகள் வீச படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.