வைத்தியசாலையில் தீ விபத்து ! 28/03/2020 - 11.15A.M

எல்பிட்டிய வைத்தியசாலையின் சிகிச்சை அறை ஒன்றில் இன்று (28) காலை தீ பரவியுள்ளது.
தீ விபத்தையடுத்து, அம்பலாங்கொடை நகர சபை தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு வருகைதந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்தின்போது குறித்த அறையில் எவரும் இருக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில், எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்தின்போது குறித்த அறையில் எவரும் இருக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில், எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.