திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேவினால் பாதுகாப்பு கவசம் வழங்கி வைப்பு
( அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு கவசங்கள் இன்று (31) முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேவினால் வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கான பாதுகாப்பு கவசங்களை வைத்தியசாலை பணிப்பாளர் ஐகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்களையும், ஊழியர்களையும், பாதுகாக்கும் நோக்கில் அவரது சொந்த நிதியிலிருந்து இந்த பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் இன்றைய தினம் மொரவெவ, மஹதிவுல்வெவ, கோமரங்கடவல மற்றும் பதவிசிறிபுர போன்ற பகுதிகளுக்கு இக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேவின் பாரியார், மொரவெவ சுகாதார வைத்திய அதிகாரி எஸ். முத்துகல, மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி எரங்க குணசேகர,மொரவெவ வைத்தியதிகாரி டொக்டர் போல் ரொஷான் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.