Header Ads

Breaking News
recent

Covid -19 நிதியத்திற்கு தலதா மாளிகையினால் நிதியுதவி

Covid – 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு ஶ்ரீ தலதா மாளிகையிடமிருந்து ஒரு கோடி ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (28) ஶ்ரீ தலதா மாளிகைக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே, தியவடன நிலமே பிரதீப் திலங்க தேலவினால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர மல்வத்து – அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்கர்களும் தலா 50 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
கொரோனா தொற்றினை ஒழிப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மல்வத்து – அஸ்கிரி பீட மகாநாயக்கர்களுக்குத் தௌிவுபடுத்தியிருந்தார்.
Powered by Blogger.