COVID – 19 சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அளிக்கப்பட்டுள்ள விரிவான பொறுப்புக்கள்
கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தல் மற்றும் அதனுடன் இணைந்த சமூக நலன் பேணல் பணிகளை இலகுபடுத்துவதற்காக கடந்த திங்களன்று உருவாக்கப்பட்ட ‘கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பல்வேறு பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோவிட் 19 - சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு (COVID – 19 Healthcare and Social Security Fund) அளிக்கப்பட்டுள்ள விரிவான பொறுப்புக்கள்:

இந்த நிதியத்திற்காக இலங்கை வங்கியின் (Bank of Ceylon) தலைமை பணியக கிளையில் பிரத்தியோகமான கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
அதன் கணக்கிலக்கம் 85737373 ஆகும்.
நிர்வாக, மற்றும் நிதி மற்றும் வங்கித் துறையில் உயர் திறமைகளுடன் கூடிய துறைசார் வல்லுனர்களைக் கொண்ட சபையொன்றின் மூலம் இந்த ‘சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம்’ முகாமைத்துவம் செய்யப்படும்.
சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் நோக்கள் கீழ்வருவனவாகும்:
கொவிட் 19 தொடர்புடைய மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்குத் தேவையான நிதித் தேவைகளை உடனுக்குடன் ஏற்பாடு செய்தல்;
அத்தியாவசிய மக்கள் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறைப் பணியாளர்கள் மற்றும் ஏனைய சேவைகளை வழங்குவோரின் சுகாதார மற்றும் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து செலவுகளுக்குமான ஏற்பாடுகளை செய்தல்;
சிறுவர்கள், பெண்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இடர் நிலைக்கு உள்ளாகியிருப்பவர்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்குதல்;
கிராமிய மற்றும் தூரப் பிரதேசங்களில் உள்ள மருந்தகங்கள், மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை நிலையங்கள், மற்றும் குடும்ப சுகாதார சேவை உள்ளிட்ட பொதுச் சுகாதார சேவை முறைமையை முன்னேற்றி - நோய்த்தொற்று இடர் நிலையைக் குறைப்பதற்காக இலங்கையின் பொதுச் சுகாதார சேவையைப் பலப்படுத்துவதற்குத் தேவையான நிதியை வழங்குதல்;
சுதேச வைத்திய முறைமை மற்றும் சுகாதாரப் பாதுகாப்புப் பொருட்களின் உற்பத்தி, மற்றும் விநியோகத்தை மேம்படுத்தல் மற்றும் தேசிய மூலப்பொருட்கள், வளங்கள், அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்தி சுகாதார, துப்பரவு பொருட்கள் புத்தாக்க உற்பத்திகளை நோக்காகக் கொண்ட ஆராய்ச்சிகளை மேம்படுத்தல்;
சர்வதேச சந்தைக்குத் தேவையான பாதுகாப்பு ஆடைகள் மற்றும் துப்பரவு பொருட்களின் உற்பத்திகளை மேம்படுத்திப் பரீட்சித்துப் பார்க்க - இலங்கையின் மருத்துவ மற்றும் விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி ஆராய்ச்சிகளை மேம்படுத்தல்;
பாரம்பரியமான மற்றும் சுபீட்சமான வாழ்வு ஒழுங்கினை மதித்து - சேதன உரத்தைப் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ மக்களை ஊக்குவிப்பதற்கான ஊடக மற்றும் கல்வி நிகழ்ச்சிகளை தயாரித்தல்;
வள ஒதுக்கீடுகள், முறையான உள்நாட்டு கொள்முதல் முறைமை மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகள், மற்றும் வழிகாட்டல்களின் அடிப்படையில் - உலக சுகாதார அமைப்பு, யுனிசெப்ஃ, ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு அபிவிருத்தி நிதி உதவி வழங்கும் முக்கிய பங்காளி நாடுகள் (WHO, UNICEF, UNDP, World Bank, ADB and Sri Lanka’s major development partner community) மற்றும் நிதி வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து நிதி திரட்டும் பணியை ஒருங்கிணைத்தல்
வள ஒதுக்கீடுகள், முறையான உள்நாட்டு கொள்முதல் முறைமை மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகள், மற்றும் வழிகாட்டல்களின் அடிப்படையில் - உலக சுகாதார அமைப்பு, யுனிசெப்ஃ, ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு அபிவிருத்தி நிதி உதவி வழங்கும் முக்கிய பங்காளி நாடுகள் (WHO, UNICEF, UNDP, World Bank, ADB and Sri Lanka’s major development partner community) மற்றும் நிதி வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து நிதி திரட்டும் பணியை ஒருங்கிணைத்தல்