22 இலட்சத்து 50 ஆயிரத்து 752 பேருக்கு வைரஸ் தொற்று - அமெரிக்காவில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 500 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரசு தொற்று உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.
உலகம் முழுவதும் 22 இலட்சத்து 50 ஆயிரத்து 752 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சத்து 23 ஆயிரத்து 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பரவியவர்களில் இதுவரை 5 லட்சத்து 72 ஆயிரத்து 110 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனால் இந்த கொடிய வைரசுக்க்கு இதுவரை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 261 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் இருந்து பரவிய இந்த வைரஸ் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
உலக அளவில் வைரஸ் பரவியவர்கள், பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 7 லட்சத்து 9 ஆயிரத்து 735 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 32 ஆயிரத்து 165 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 535 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது.