உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் நினைவாக 2 நிமிட மௌன அஞ்சலி!!
சென்ற வருடம் உயிர்ப்பு பெருவிழா அன்று நடாத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் நினைவாக 2 நிமிட மௌனம் அனுசரிக்கவும், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள்.
சென்ற வருடம் 21.04.2019 உயிர்ப்பு பெரிவிழா அன்று நடாத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் நினைவாக அனைத்து மக்களையும் தத்தமது வீடுகளில் இருந்த வண்ணமாக
2 நிமிட மௌ இறைவணக்கம் அனுசரிக்கும் படியாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில், கடந்த ஆண்டு உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் ஓராண்டு நினைவாக இடம்பெறவிருந்த அனைத்து நிகழ்வுகளும், கோவிட்-19 ஊரடங்கு நடவடிக்கையால் நிறுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் நினைவாக, நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றினைந்து இரண்டு நிமிடம் மௌனம் அனுசரிக்குமாறும், அந்நேரத்தில் அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் , காலை 8:40 மணிக்கு மணிகளை ஒலிக்கு செய்யுமாறும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், அன்றைய நாள் காலை 8.45 மணிக்கு, இரண்டு நிமிடம் மௌனம் அனுசரிக்கவும், காலை 8.47 மணிக்கு, ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் விளக்கு அல்லது, மெழுகுதிரிகளை ஏற்றி உயிரிழந்தவர்களின் நினைவாக மத சடங்குகளை அனுசரித்து இறைவேண்டுதல் மேற்கொள்ளும் படியாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள், இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில்ல், ஏப்ரல் 16, இவ்வியாழனன்று, செய்தியாளர் கூட்டத்தில் இவற்றை விளக்கிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள், 2019ம் ஆண்டு உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் ஓராண்டு நினைவாக இடம்பெறவிருந்த அனைத்து நிகழ்வுகளும், கோவிட்-19 ஊரடங்கு நடவடிக்கையால் நிறுத்தப்பட்டுள்ளன என்று எடுத்துரைத்தார்.
2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி உயிர்ப்புப் பெருவிழாவன்று காலையில், கொழும்புவில் இரு கத்தோலிக்க ஆலயங்கள், மட்டக்களப்பில் ஒரு இவாஞ்சலிக்கன் ஆலயம் மற்றும், மூன்று ஆடம்பர பயணியர் மாளிகைகளில், ஒன்பது தற்கொலை குண்டுவெடிப்பு நபர்கள், பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தினர். இவற்றில், 37 வெளிநாட்டவர் உட்பட, குறைந்தது 279 பேர் உயிரிழந்தனர் மற்றும், குறைந்தது 500 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்