Header Ads

Breaking News
recent

"காந்தள் உதவும் கரங்கள்"அமைப்பின் சகோதர அமைப்பான "அறம் செய்"மற்றும் "வீரத்தமிழர் முன்னணி" அமைப்பினர் ஊடாக வறுமைக்குட்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு.


(பிராந்திய செய்தியாளர் எஸ்.ரி.பிரணவன்)
"காந்தள் உதவும் கரங்கள்"அமைப்பின் சகோதர அமைப்பான "அறம் செய்"மற்றும் "வீரத்தமிழர் முன்னணி" அமைப்பினர் ஊடாக வறுமைக்குட்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு.

07.04.2020 இன்று புக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இருட்டுமடு,குரவில்.மூங்கிலாறு,தேராவில்  பகுதியில் சுமார் 100 குடும்பங்களுக்கான உலர்உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இன்று இந்த அத்தியவசிய பொருட்களை காந்தள் அமைப்பின் விசேட செயலர் திரு. நிக்சன் மற்றும் அமைப்பின் இணைப்பாளர் காயத்திரிதேவி பொருளாளர் நிலோஜினி மருதமடு மீனவ சங்கத்தின் தலைவர் ரகுராசா ஆகியோர் இணைந்து குறித்த கிராம சேவையாளர்களூடாக வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில்  இருட்டுமடு,குரவில் கிராம சேவையாளர் திரு.வருண்ஜீவ் மூங்கிலாறு கிராம சேவையாளர் திரு.கஜகோகுலன் தேராவில் கிராம சேவையாளர் திருமதி. நாமளா ஆகிய கிராம சேவையாளர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.உண்மையில் எமது பிரதேசத்தில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் தற்போதைய வாழ்வியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறித்த அமைப்பானது இவ்வாறான மனிதாபிமான செயற்பாடுகளை மாவட்ட ரீதியாக முன்னெடுத்து வருகின்றது.

அந்த அடிப்படையில் இவ் அத்தியவசிய பொருட்கள் விசேடமாக வழங்கி வைக்கப்பட்டது. என்று அதன் செயலர் திரு நிக்சன் தெரிவித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.