திருகோணமலை மாவட்டத்தில் நடமாடும் வங்கிச்சேவை!!

கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பிறக்கப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக பொதுமக்கள் வங்கிச்சேவைகளை பெறுவதில் அசளகரியங்களை எதிர்நோக்குவதனை முன்னிட்டு மக்கள் வங்கி நடமாடும் வங்கிச்சேவையை தமது வேண்டுகோளுக்கு இணங்க திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
அதன்படி இம்மாதம் 05ம்திகதி திருகோணமலை நகர்,மொரவெவ,மகாதிவுள்வெவ,கோமரங்கடவெல,திரியாய்,குச்சவெளியிலிலும் 06ம்திகதி தம்பலகாமம்,முள்ளிப்பொத்தானை,கந்தளாய்,பேராறு,அக்போபுர,வான்எல,ஆயிலடி,கிண்ணியாவிலும்,08ம்திகதி சேருநுவர,தெஹிவத்த,வெருகல்,இலங்கைமுகத்துவாரத்திலும் 09ம்திகதி மூதூர்,கட்டைபரிச்சான்,மல்லிகைத்தீவு,சம்பூர் மற்றும் பெரியவெளி ஆகிய பிரதேசங்களிலும் குறித்த நடமாடும வங்கிச்சேவை இடம்பெறவுள்ளது.
மக்கள் வங்கி கணக்கிலிருந்து பணம்மீளப்பெறல் சீட்டை பயன்படுத்தி பணம் மீளப்பெறல்,மக்கள்வங்கி மற்றும் ஏனைய வங்கி ATM அட்டைகளை பயன்படுத்தி பணம் மீளப்பெறல் உட்பட பல சேவைகளை மக்கள் இதன் மூலம் பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.