Header Ads

Breaking News
recent

ஆரையம்பதி பிரதேசத்தில் வடிசாராயம் கடத்தல் !!


ஆரையம்பதி மாவிலங்கத்துறை பகுதியில் 5 கொள்கலன் வடிசாராயத்தினை கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவிலங்கத்துறை வாவியில் படகொன்றில் ஏற்றியவாறு வடிசாராயம் கடத்தப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே வடிசாராய கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக , காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தெரிவித்துள்ளார்.

வடிசாரய கடத்தலில் ஈடுபட்ட ஐவர் பொலீஸாரைக் கண்டு தப்பி ஓடியுள்ளனர் இவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் பொலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

கைவிடப்பட்ட படகிலிருந்து ஐந்து கொள்கலன்கள், வடிசாராயத்தை உற்பத்தி செய்யும் உபரணங்கள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.