Header Ads

Breaking News
recent

தூக்கில் தொங்கிய நிலையில் கற்பிணி தாயொருவர் சடலமாக மீட்பு !!!


(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கர்ப்பிணித்தாய் ஒருவரின் சடலமொன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறு உயிரிழந்தவர் சம்பூர் - சமுர்த்தி அபிவிருத்தி வங்கியின்  உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் நிரோஜன் லுஷாந்தினி (26வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- 
கணவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாகவும், தாயார் வெளிநாட்டில் வாழ்ந்து வருவதாகவும் கணவர் உயிரிழந்ததை அடுத்து அவரது அக்காவின் வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் இன்றைய தினம் அக்காவும் அவரது கணவரும் 
கடைக்குச் சென்றபோது அக்காவின் எட்டு வயது மகன் வீட்டில் இருந்துள்ளான். 

இதேவேளை 8 வயது சிறுவனிடம் கடைக்கு சென்று வருமாறு கூறியதாகவும்  சிறுவன் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து சிறுவனின் தாய் மற்றும் தந்தை வருகை தந்து பார்த்தபோதும் கிணற்றில் டெப் போடப்பட்டிருந்ததாகமும் அதிக அளவிலான நேரம் போடப்பட்டிருந்தமையினால் உள்ளே சென்று பார்த்தபோது கிணற்றில் தொங்கிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சடலத்தை மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. ஜே. எம். நூறுல்லாஹ் பார்வையிட்டதுடன் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிசாருக்கு கட்டளையிட்டார். 


Powered by Blogger.