Header Ads

Breaking News
recent

மருந்து வாங்கவென கூறி ஹெரோயின் வாங்கி வந்த இருவர் கைது!


(Kinniya Munees)
ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போது மருந்து சிட்டையை பயன்படுத்தி மனைவிக்கு மருந்து எடுக்கச் செல்வதாக தெரிவித்து முச்சக்கர வண்டியில் ஜா-எல பிரதேசத்திற்கு சென்று நீர்கொழும்பு பிரதேசத்திற்கு ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு வந்த நபர் உட்பட இருவரை நீர்கொழும்பு போதைப் பொருள் பிரிவு பொலிஸார் இன்று (10) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 17 கிராமுக்கு அதிகமான ஹெரோயினையும் முச்சக்கர வண்டியொன்றையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், நீர்கொழும்பு பிரதேசங்களில் விற்பனை செய்வதற்காகவே குறித்த ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரியப்படுகிறது.


Powered by Blogger.