Header Ads

Breaking News
recent

முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு சுகாதார துறையின் அவசர அறிவித்தல்!!

(பிராந்திய செய்தியாளர் எஸ்.ரி.பிரணவன்)
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலத்தில் வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்கள் வந்து இருப்பார்களாக இருந்தால் அவர்கள் தொடர்பிலான தகவலை மக்கள் 0212060007 இந்த தொலை பேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் எஸ்.சுகந்தன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று என அடையாளம் காணப்பட்டுள்ள அபாயவலயங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து பலர் வடக்கின் பல்வேறு மாவட்டத்திற்கு வருகை தருகின்றார்கள் இவ்வாறானவர்கள் பொதுசுகாதார பரிசோதகரிடம் பதிவுகளை மேற்கொண்டு கண்காணிக்க ஆவண செய்யவேண்டும் இன்னிலையில் எதுவித பதிவுகளும் இன்றி பலர் வருகை தருகின்றமையினை அவதானிக்கமுடிந்துள்ளது.

இன்னிலையில் மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உங்கள் கிராமத்தில் வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்கள் வந்து தங்கி நின்றால் அவர்கள் தொடர்பிலான தகவலை 0212060007 இந்த இலகத்திற்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Powered by Blogger.