மண்வெட்டி தடியால் தாக்கினேன்- சந்தேகநபர் வாக்கு மூலம்
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-மொரவெவ 04ம் வாய்க்கால் பகுதியில் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தமை தொடர்பில் தாய் மற்றும் மகனை இன்று (10) கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அதே இடத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் சிவனேஸ்வரி (59வயது) மற்றும் அவரது சுப்ரமணியம் ரமேஷ் (38வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது- வியாழக்கிழமை 09ம் திகதி ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்ற வேளையில் மூவர் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியதாகவும், குடிபோதையில் வீட்டுக்கு வந்து சின்னம்மாவான சுப்ரமணியம் சிவனேஸ்வரி என்பவருக்கு பேசியதாகவும் அதனையடுத்து கோபம் கொண்ட மகன் தடியால் தாக்கியதாகவும் அதேவேளை கீழே விழுந்ததாகவும் இதனையடுத்து மண்வெட்டி தடியால் தாக்கியதாகவும் கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் தெரிவித்தார்.
இதன்போது அதே இடத்தைச் சேர்ந்த சிவராஜசிங்கம் சந்திரகுமார் ( 44 வயது) உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் றுச்சிர நதீர வருகை தந்து சடலத்தை பார்வையிட்டதுடன் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட தாயும் மகனும் கோபம் ஏற்பட்டமையாலேயே இவ்வாறான விபரீதம் இடம்பெற்றதாகவும் தாங்கள் அவரை கொல்ல நினைக்கவில்லை எனவும் இவரை தனது அண்ணனின் மகன் எனவும் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
உயிரிழந்த பிறகு சடலத்தை பிரேத பரிசோதனை முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் உள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.