மீன் பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி மரணம்!!
( அப்துல்சலாம் யாசீம்)
ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் வலஹவித்தவெவ பகுதியில் மீன் பிடிக்க சென்ற நால்வரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த சம்பவம் இன்றிரவு (23) ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான லத்தீப் ரஹ்மத்துல்லா (26வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது கரடிக்குளம் குளத்துக்கு மீன் பிடிக்க சென்ற நான்கு பேரில் ஒருவரே நீரில் மூழ்கியதாகவும் தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹொரவ்பத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.