கட்டைக்காடு கடல் பகுதியில் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது!

சந்தேகநபர்கள் இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களையும், மீட்கப்பட்ட கஞ்சாவையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 150 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும் இது தொடர்பான உறுதிப்படுத்தப்பட கூடிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.