Header Ads

Breaking News
recent

இராணுவத் தளபதியின் விசேட அறிவிப்பு!

இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டு வரும் முகாம்களில் இருந்து இதுவரை 142 பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
அத்துடன், நான்காயிரத்து 348 பேர் இதுவரை தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளதாகவும், ஆயிரத்து 582 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றினால்.

பாதிக்கப்பட்ட சிலர், கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியிலிருந்து அடையாளங் காணப்பட்டதையடுத்து, 242 பேர் நேற்று முன்தினமும் , ஆயிரத்து 10 பேர் நேற்றைய தினமும் குறித்த பகுதியிலிருந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.