நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்துகள் விநியோகம்.

(கிண்ணியா முனீஸ்)
புத்தளத்தில், தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினருக்கும், பொதுமக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயர்வேத மருந்துப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.வடமேல் மாகாண ஆயர்வேத ஆணையாளர் வைத்தியர் அநுர செனவிரத்ன,
வடமேல் மாகாண சமூக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் தெருவனி நர்மதாஆகியோரின் வழிகாட்டலிலும், வடமேல் மாகாண ஆயர்வேத திணைக்களம் மற்றும் புத்தளத்தில் இயங்கி வரும் SFRD இன் அணுசரணையிலும் குறித்த ஆயர்வேத மருந்துப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.
வன்னாத்தவல்லு பிரதேச சமூக சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் ஜே.எம்.நைஜீல், புத்தளம் பிரதேச சமூக சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் வைத்தியர் ஏ.கே.ஏ. நிஹார், கற்பிட்டி பிரதேச சமூக சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் யு.எம்.ரயீஸ், மஹாகும்புக்கடவல பிரதேச சமூக சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் ஏ.எச். மில்ஹான் பாரிஸ், கருவலகஸ்வவ பிரதேச சமூக சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் எம்.எல்.எச். பஹ்மி ஆகியோர் குறித்த ஆயர்வேத மருந்துப் பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர்.
உலகலாவிய ரீதியில் மாத்திரமின்றி, இலங்கை மக்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு மற்றும் வைத்தியர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றன.
இதன் அடிப்படையில், புத்தளத்திலும் கொரோன தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 30ஆக அதகரித்துள்ள நிலையில் புத்தளத்தில் வாழும் மக்களுக்கு தத்தமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதன் மூலம் இந்த கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
இதன் அடிப்படையில், வடமேல் மாகாண ஆயர்வேத திணைக்களம் மற்றும் புத்தளத்தில் இயங்கி வரும் ளுகுசுனு இன் அணுசரணையில் கிடைக்கப்பெற்ற குறித்த ஆயர்வேத மருந்துப் பொருட்கள் புத்தளம், வன்னாத்தவில்லு, கற்பிட்டி, மஹாகும்புக்கடவல ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றும் பொதுமக்களை சென்றடையும் வகையில், உள்ள பொலிஸ் நிலையங்கள், பௌத்த விகாரைகள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பிரதேச செயலகங்கள், என்பவற்றுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு வழங்கப்படும் குறித்த ஆயர்வேத மருந்துப் பொருட்களில் மரமஞ்சள், கொத்தமல்லி, பட்பாடகம், அரக்கு ஆகிய மருந்து பொருட்கள் குடிப்பதற்கும், பெருங்காயம், வசம்பு என்பன கையில் கட்டுவதற்கும் பொதிகள் செய்யப்பட்டு குடும்பம் ஒன்றுக்கு ஒரு பொதிகள் வீதம் விழிப்புணர்வு படிவத்துடன் வழங்கப்பட்டு வருகின்றன.
பெருங்காயம், வசம்பு என்பன கர்ப்பிணித் தாய்மார்களை தவிர ஏனையவர்கள் குடிக்கவும் முடியும் என வன்னாத்தவல்லு பிரதேச சமூக சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் ஜே.எம்.நைஜீல் தெரிவித்தார்.
இந்த கொரோனா தொற்று வைரஸ் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பினித் தாய்மார்களை அதிகளவில் பாதிக்கக் கூடியது. எனவே, இந்த தொற்றிலிருந்து பாதுகாப்பை பெறுவதற்கு மக்கள் விட்டமின் சீ சத்துள்ள உணவு வகைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அத்தோடு, குளிர்ந்த நீர், குளிர்பானம் என்பவற்றை அருந்துவதை தவிர்த்து, சுடுநீர், இஞ்சி கலந்த தேநீர் என்பவற்றை அடிக்கடி அருந்துவதுடன், தேசிக்காய் , ஆரஞ்சு ஜூஸ் (குளிர் இன்றி) துளசி, என்;பவற்றையும் அதிகமாக அருந்த வேண்டும்.
எனவே, எமது உடலில் சமிபாட்டுத் தொகுதியையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் சரியாக பேணிவந்தால் கொரோனா மட்டுமல்ல எந்த வைரஸூம் எமக்கு ஒரு சவாலாக இருக்காது. இதுபற்றி மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
தேவையில்லாமல் அச்சம்கொள்வதும் எமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும், சமிபாட்டுத் தொகுதியையும் சரிவர பேணுவதற்கு அது தடையாக அமையும் எனவும் வன்னாத்தவல்லு பிரதேச சமூக சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் ஜே.எம்.நைஜீல் மேலும் தெரிவித்தார்.