Header Ads

Breaking News
recent

சித்தியடைந்த மாணவி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!

(எஸ்.ரி.பிரணவன்)
முல்லைத்தீவு-சிலாவத்தையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்ற மாணவி ஒருவர், எதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்று 28.04.2020 செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கற்று வந்த சந்திரன் கம்ஷிகா (17-வயது) எனும் பாடசாலை மாணவியே தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (27) வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்று தனது பாடசாலை ரீதியில் 3ம் இடத்தை பிடித்திருந்த நிலையிலேயே தான் எதிர்பார்த்தது போல் 9-ஏ சித்தி கிடைக்கவில்லை எனத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வாழ்த்து சொல்வதற்கு அவரது பாடசாலை ஆசிரியர்கள் அழைப்பெடுத்த போதிலும் அவர்களுடன் பேச மறுத்திருந்த நிலையில் இன்று காலை சுவாமியறையில் குறித்த மாணவியின் சடலம் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டது.

மாணவர்களே நீங்கள் எதிர்பார்த்த பெறுபேற்றினை பெற முடியாமல் போவதும், சித்தியடையாமல் போவதும் அவமானம் கிடையாது. பரீட்சை பெறுபேறுகளை தாண்டி நீங்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது அதிகமுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Powered by Blogger.