Header Ads

Breaking News
recent

மதில் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் பரிதாப உயிரிழப்பு.




(பிராந்திய செய்தியாளர்  எஸ்.ரி. பிரணவன்)
புதுக்குடியிருப்பு  பொலீஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியிலே இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.


ஒட்டுசுட்டான் புளியங்குளத்தை சேர்ந்த 23 வயதுடைய சௌந்தராஜன் சுகந்தன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.  குறித்த இளைஞன் தனியார் பால் பதநிடும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார் என்பதுடன் குறித்த நிறுவனத்தின் புதுக்குடியிருப்பு பால் பதநிடும் நிலையத்தின் வளாகத்திலே இவர் உயிரிழந்துள்ளார்.  இவரின் மரணம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் குறித்த இளைஞரின் சடலம் உறவினரிடம் கையளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.