தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு .

குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.
குறித்த வீட்டில் வசித்து வந்த மனைவி மற்றும் பிள்ளைகள் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள தமது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையாக இருந்த குடும்ப தலைவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டிற்கு காலையில் வந்த உறவினர்கள் குறித்த நபர் தூக்கில் சடலமாக காணப்படுவதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெரியசாமி மோகனதாஸ் (வயது 38) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இது தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.