கொரோனா சந்தேகம்! யாழ்.சிறைச்சாலை கைதிகள் மூவருக்கு

மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் பணிப்பிற்கமையவே இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த 3 பேரும் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து, இந்திய கடத்தல்காரர்களுடன் பழகி கஞ்சாவை பெற்றுவந்துள்ளனர்.
3 பேரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம்.
என சந்தேகிக்கப்படும் நிலையில்,
அவர்களை தனிமைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளிடம் மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.
இதற்கமைய சந்தேக நபர்கள் சிறைச்சாலையில் பிரத்தியேக இடமொன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், அவர்களுக்கு அடுத்த சில நாட்களில் இரத்த பாிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனை மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.