Header Ads

Breaking News
recent

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை! சுகாதார பிரிவினர் தகவல்!!

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் கொரோனா வைரஸ் அதிகம் பரவும் மாவட்டங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

ஏனைய 19 மாவட்டங்களில் எந்தவித பாதிப்பும் இல்லை என சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்திலும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அபாய வலயத்திற்குள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட எவரும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இதுவொரு போலியான தகவல் எனவும் இது குறித்த நுவரெலியா மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளனர்.

Powered by Blogger.