Header Ads

Breaking News
recent

புதிதாக நியமனம் வழங்கப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் கொடுப்பனவு

அரசாங்கத்தினால் புதிதாக நியமனம் வழங்கப்பட்ட 54,000 பட்டதாரிகளுக்கான கொடுப்பனவு இதுவரை கிடைக்காதவர்களுக்கு அதனை துரிதமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்;தாக்கம், தகவல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் இதுவரையில் இந்தியாவிற்கு மாத்திரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பங்களிப்புடன் 580 இலங்கை மாணவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். இதற்கமைவாக கட்டம் கட்டமாக அனைத்து நாடுகளிலும் உள்ள மாணவர்கள் மற்றும் தொழிற்துறையினரை நாட்டுக்கு அழைத்தல். இதற்காக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் மூலம் விசேட இணையதளமொன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் கூறினார்.

நாட்டுக்குத் தேவையான நிதியை செலவிடுவது தொடர்பில் அரசியலமைப்பு ரீதியான எந்த நெருக்கடி நிலையும் ஏற்படவில்லை. புதிய பாராளுமன்றம் தெரிவாகி மூன்று மாதங்கள் வரை எந்தவித கடன் எல்லையுமின்றி எந்தச் செலவும் செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.
நாட்டில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்கத்திற்கு நிதி பெறுவதில் நெருக்கடி நிலை ஏற்படும். இதற்காக பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டுமென சிலர் குறிப்பிடுவதாக ஊடகவியலாளர் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ,அரசியலமைப்பிற்கமைய நிதி தொடர்பான முழுமையான அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருக்கிறது. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதியை தவிர வேறு எவருக்கும் எக்காரணம் கொண்டும் மீள கூட்ட முடியாது. அவசரகால சட்டத்தை அறிவிக்கவும் அதனை திருத்தவும் மாத்திரமே அவரால் பாராளுமன்றத்தை மீள கூட்ட முடியும். வேறு எக்காரணத்திற்காகவும் பாராளுமன்றத்தை கூட்ட முடியாது. மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான எந்த தேவையும் கிடையாதென ஜனாதிபதி கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டும் தேவையில்லை என ஜனாதிபதி அமைச்சரவையிலும் அறிவித்துள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டனர்.
Powered by Blogger.