Header Ads

Breaking News
recent

வீடுகளில் இருந்தபடி புனித ரமலான் நோன்பு தொழுகையை முஸ்லிம்கள் மேற்கொண்டனர்

முஸ்லிம்களின் புனித மாதம் ரமலானை முன்னிட்டு மசூதிகளில் தொழுகை நடத்தப்படுவது வழக்கம்.  ஆனால் கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.  பொது இடங்களில் 5க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டு உள்ளது.  இதனால் மதவழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு உள்ளன.  இதேபோன்று இந்தியாவில் மசூதிகள் அனைத்தும் மூடிய நிலையில் உள்ளன.


இந்நிலையில், ரமலான் நோன்பு இருக்கும் முஸ்லிம் மக்கள் தங்களது வீடுகளில் இருந்தபடி புனித ரமலான் நோன்பு தொழுகையை மேற்கொண்டனர்.  தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள புகழ் பெற்ற மெக்கா மசூதி மூடப்பட்டு உள்ளது.

இதேபோன்று தமிழகத்தில் ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் மசூதிகள் மூடப்பட்டு உள்ளன.  இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் வீடுகளில் இருந்தபடி புனித ரமலான் நோன்பு தொழுகையை மேற்கொண்டனர்.
Powered by Blogger.