Header Ads

Breaking News
recent

மெனிங் பொதுச் சந்தை மேலும் ஒரு வாரத்திற்கு பூட்டு!



தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு கொழும்பு, புறக்கோட்டை, மெனிங் பொதுச் சந்தையை மேலும் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

தற்போது மெனிங் சந்தைக்கு விற்பனைக்காக எடுத்து வரப்பட்டுள்ள மரக்கறிகள் மற்றும் பழங்களை துருமிகொட, நாரஹேன்பிட்டி, இரத்மலானை, வெலிசறை, பிலியந்தலை, வியாங்கொடை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களுக்கு எடுத்துச் செல்லுமாறும் வியாபாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மெனிங் சந்தையிலிருந்து மொத்த அல்லது சில்லறை விலைக்கு மரக்கறிகள், பழ வகைகளை கொள்வனவு செய்யுமாறு வர்த்தகர்களுக்கு, ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
Powered by Blogger.