Header Ads

Breaking News
recent

இன்று உலக சுகாதார தினம் !!!


(திருமலை பாயிஸ்)
இன்று உலக சுகாதார தினம் ஆகும். உன்னதமான சேவையைப் புரிந்துவரும் தாதியர்கள் மற்றும் குடும்பநல சுகாதாரப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் ஆண்டாக, 2020ஆம் ஆண்டினை, உலக சுகாதார அமைப்பு - World Health Organization (WHO) - பிரகடனப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் - தற்போது, 2 கோடி 7 இலட்சம் தாதியர்களும் குடும்பநலச் சுகாதாரப் பணியாளர்களும் கொரோனா நோய்க்கிருமியின் கோரப்பிடியிலிருந்து - எமது நாட்டையும் ஒட்டுமொத்தமான மனுக்குலத்தையும் காத்து விடுவிக்க, இரவு பகலெனப் பாராது, ஓய்வே இன்றிப் போராடி வருகின்றனர்.
அவர்களது சேவையைப் பாராட்டி இன்றைய நாளிலே அவர்களுக்கு எமது ஆத்மார்த்த நன்றியைத் தெரிவிப்போம்!
Powered by Blogger.