அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் கூட்டத்தில் பல முடிவுகள் !!

பசில் ராஜபக்ஷ தலைமையிலான, மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி ஆகியோர் இணைந்து அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் கூட்டத்தில் பல முடிவுகள் இன்று எடுக்கப்பட்டன.
> ஊரடங்கு உத்தரவின் போது அனைத்து ஆயுர்வேத மருத்துவமனைகளையும் திறந்து வைக்க வேண்டும்.
> ஒவ்வொரு பி.செ பிரிவிலும் குறைந்தபட்சம் ஒரு பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத கிளினிக் ஊரடங்கு உத்தரவின் போது நடமாடும் சேவைகளை வழங்குகிறது என்பதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
> இப்போது அதிக அளவில் நுகரப்படும் கொத்தமல்லி, இஞ்சி மற்றும் வெனிவெல்ஜெட்டாவை இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
> ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் ஊரடங்கு உத்தரவின் போது நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை வீட்டிலேயே பார்க்க அனுமதிக்க வேண்டும்.
> ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நீண்டகால ஆயுர்வேத பயனாளிகளுக்கு தபால் மூலம் வீடுகளுக்கு மருந்துகள் அனுப்புதல் வேண்டும்.