EDCS உறுப்பினர்களுக்கும் ஊழியர்களுக்கும் கடன் சலுகை!!
(கிண்ணியா முனீஸ்)
கொரோனா தோற்றால் இன்னலுக்கு உள்ளாகியுள்ள அதிபர் ஆசிரியர்களை பல்வேறு வகையில் ஏமாற்றத்துக்கு உள்ளாகிய இந்நிலையில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எமது சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஆறு பேரும் தொடர்ந்து மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக ஏப்ரல் 15ம் திகதி பணிப்பாளர் சபையினால் மேற்கொண்ட தீர்மானத்தின்படி கீழ்வரும் சலுகைகள் கல்வி கூட்டுறவு சங்க அங்கத்தவர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் , கல்விக் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் பிரதித் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார் மேலும் கூறுகையில்
1. ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட மாதாந்த தவணை கட்டணத்திலிருந்து அங்கத்துவக் கட்டணம் மட்டும் (455 /= ) கடனுக்கு உரிய வட்டி தொகை தவிர்ந்த மிகுதிப் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட கணக்கிற்கு மாற்றப்படும். எனினும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பணிப்பாளர்கள் வட்டியுடன் கூடிய முழுமையான மாதத்தவணை பணத்தையும் அங்கத்தவர்களுக்கு மீளச் செலுத்துமாறு கோரிக்கையை முன்வைத்த போதும் தற்போது நிர்வாகத்தை மேற்கொள்ளும் பணிப்பாளர் சபை அதை நிராகரித்த செயலானது அங்கத்தவர்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியாகும்.
2. மே மாதம் அங்கத்தவர்களின் சம்பளத்திலிருந்து வட்டியுடன் கூடிய முழுமையான தொகையை தவிர்த்து மாதாந்த அங்கத்துவ பணம் மாத்திரம் அறவிடப்படும்.
அத்தோடு இச்சலுகை கல்வி கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என சுந்தரலிங்கம் பிரதீப் மேலும் தெரிவித்துள்ளார்.
