Header Ads

Breaking News
recent

ஹட்டனில் 9 வீடுகள் முற்றாக தீக்கிரை!

ஹட்டன் போட்ஸிலி தோட்டத்தில்ஏற்பட்ட தீ விபத்த்தில் 9 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை இரவு 7மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தற்போது 50 இற்கும் அதிகமானவர்கள் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் இவர்களை தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இத்தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Powered by Blogger.