பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு !
(யூஸூப் பஹ்மி - திருகோணமலை)
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஐந்து (5) வருடங்களுக்கு மேலாக தற்போது திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் பெண் பொலிஸ் பரிசோதகராக (WIP) ஆக கடமையாற்றும் கொழும்பைச் சேர்ந்த ஜெஸ்மின் ராணி அவர்கள் 2020.02.08 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் பெண் பிரதம பொலிஸ் பரிசோதகராக (WCI) ஆக இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் பதவி உயர்வு பெற்று உத்தியோகபூர்வமாக தனது பதவியினைப் பொறுப்பேற்று எமது முஸ்லிம் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெருமையினைச் சேர்த்துள்ளார்.
32 வருடங்களாக இலங்கையின் சிவில் பாதுகாப்பு துறையான பொலிஸ் சேவையில் கடமையாற்றும் இவர் யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு பகுதி உட்பட நாட்டின் பல பாகங்களிலும் கடமையாற்றியுள்ளர் 1988 ஆம் ஆண்டு பெண் பொலிஸ் கொஸ்தாப்பிலாக (WPC) தனது கடமையை ஆரம்பித்த இவர் 1999 ஆம் ஆண்டு பெண் உப பொலிஸ் பரிசோதகராகவும் (WSI) 2010 ஆம் ஆண்டு பெண் பொலிஸ் பரிசோதகராகவும் (WIP) பதவி உயர்வு பெற்று கடமையாற்றியதோடு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு மற்றும் ஐக்கிய நாடுகள் (UN) சபையில் சமாதான பாதுகாப்பு உத்தியோகத்தராகவும் கடமையாற்றி உள்ளார்.
தனது சேவைக்காலத்தில் அவர் வகித்த, வகிக்கும் பிரிவில் கூடிய அனுபவம் வாய்ந்தவராக காணப்படுவதோடு சிங்களம், ஆங்கிலம், தமிழ் உட்பட நான்கு மொழிகளில் சரலமாக பாண்டித்தியம் பெற்றவர் என்பதோடு சட்டத்தினையும் கடமையினையும் மிக நேர்த்தியாக செய்து தனது அதிகாரத்திட்குட்பட்ட வகையில் அனைத்து இன மக்களுக்கு நீதியான முறையில் சேவையாற்றக் கூடிய இவர் (WCI) பதவி உயர்வு பெறுவதையிட்டு சிவில் சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு இவ் உயர் பதவியில் தற்போதுள்ள ஒரே ஒரு முஸ்லிம் பெண் என்பதில் முஸ்லிம் சமூகம் பெருமை கொள்கின்றது இவரது தன்னலமற்ற சேவை முழு நாட்டிற்கும் சென்றடைய மனதார வாழ்த்துகின்றோம்.
இவர் கொழும்பு கொலன்னாவ சென் ஜோசப் கல்லூரியின் பழைய மாணவி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.



