Header Ads

Breaking News
recent

சவுதி அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு:

(Source:saudi gazette)
ரமலான் 21 முதல்  ரமலான் 29 வரைஅதாவது  (மே 14 முதல் மே 22  வரை) தற்போது உள்ள நிலையே தொடரும் எனவும்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தளர்வு ரமலான் 20 வரை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது புதிய அறிவிப்பாக தற்போது உள்ள நிலையே 29 ரமலான் வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மக்காஹ் பகுதிக்கு பொருந்தாது மக்காவில்  24 மணிநேரம் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் எனவும். ஐந்து நபருக்கு மேல் கூடினால் அபராதம் விதிக்கப்படும் மேலும் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் மற்றும் ரமலான் 30  முதல் ஷவ்வால் 4 வரை (மே 23 முதல்  மே 27)  ஆகிய தினங்களில் சவுதி அரேபியாவில் அனைத்து பகுதிகளுக்கும் 24 மணிநேரம் ஊரடங்கு (total lockdown) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 24 மணி நேரம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாட்களில் நீங்கள் வெளியே போவதற்கு அல்லது அவசர தேவையாக வெளியே போவதாக இருந்தால் tawakkalna app பதிவு செய்தால் அதில் ஒரு மணி நேரம் அனுமதி அளிக்கப்படும் எனவும்  இது ஒரு தனிநபருக்கு மட்டுமே பொருந்தும் அதாவது பதிவு செய்த நபர் மட்டுமே போக முடியும் என அவ்வறிக்கையில் சுற்றிக்காட்டப்பட்டுள்ளது  .
(பெருநாள் அன்று நீங்கள் வெளியே செல்வதற்கும் இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்) 


Powered by Blogger.