Header Ads

Breaking News
recent

தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சமையல் பாத்திரங்கள் வழங்கிவைப்பு!!



(முல்லைத்தீவு எஸ்.ரி.பிரணவன்)
ஹட்டன் எபோட்ஸிலி தோட்டத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் சமையல் பாத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரின் ஆலோசனைக்கேற்ப இந்தச் சமையல் பாத்திரங்களை தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் வழங்கி வைத்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் செனன் வட்டார அமைப்பாளர் விஜயேந்திரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் எபோட்ஸிலி தோட்டத் தலைவர் கந்தையா ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக இந்தச் சமையல் பாத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பாத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் திருமதி சசிகலா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் பணிமனை இணைப்பாளர்களான சிவஞானம், பிரபாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் சோ. ஸ்ரீதரன் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு தொகுதியை பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தோட்ட நிருவாகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எபோட்ஸிலி தோட்ட முகாமையாளருடன் கலந்துரையாடியுள்ளார்.
Powered by Blogger.