Header Ads

Breaking News
recent

நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலி !!

(எஸ்.டீ. பிரணவன்) 
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று  மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மாணவன் முதலாம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 20 வயதுடைய பிரதீப்குமார் வளர்சிகன் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த மாணவன் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் உயதரப்பரீட்சை 2019 வர்த்தகப்பிரிவில் மாவட்ட ரீதியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் எனவும் அறியமுடிகின்றது.

சம்பவ இடத்திற்குச் சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Powered by Blogger.