Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது!

(அப்துல்சலாம் யாசீம்) 
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 24 மற்றும் 26 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

Powered by Blogger.